
மாஸ்டர் - 25வது நாளும், 250 கோடியும்...
கொரோனா தொற்றால் தியேட்டர்கள் பக்கம் வராமல் இருந்த மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைத்ததில் "மாஸ்டர்" படத்திற்கு மட்டுமே முக்கிய பங்குண்டு. கடந்த ஜனவரி 29ம் தேதி ஒடிடி தளத்திலும் "மாஸ்டர்" வெளியானது. இருப்பினும் பல ஊர்களில் தியேட்டர்களிலும் இன்னும் மக்கள் வந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாளையுடன் படம் வெளிவந்து 25 நாளாகப் போகிறது. இந்த 25 நாட்களில் படம் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கை ஏற்படுத்தி வருகின்றனர்.
50 சதவீத இருக்கைகளிலேயே 250 கோடி ரூபாய் வசூல் என்பது சினிமா வியாபாரத்தில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஓடிடி தளத்தில் மட்டும் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் 300 கோடி ரூபாய் வசூலைக் கூடத் தொட்டிருக்கும் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!