
குட்டி ஸ்டோரி - விரும்பி நடித்த விஜய் சேதுபதி
கவுதம் மேனன் இயக்கியுள்ள கதையில் அவரும், அமலா பால் நடித்துள்ளனர். விஜய் இயக்கியுள்ள கதையில் அமிதாஷ், மேகா ஆகாஷ் ஆகியோரும், வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண், சாக்ஷியும், நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி, "அருவி" அதிதி பாலன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தக் குறும்படத்தில் விஜய் சேதுபதி அவராகவே விரும்பி நடிக்க வந்தார் என இயக்குனர் நலன் குமாரசாமி பேசுகையில் தெரிவித்தார். “இந்தப் படத்தை இயக்க முடிவு செய்ததும் என்னுடைய கதையில் நடிக்க வைப்பதற்காக ஒரு நாயகி எப்படி நடிக்கிறார் என விஜய் சேதுபதியிடம் கேட்டேன். அவர், இப்ப என்ன பண்ற என என்னிடம் கேட்க இந்தக் கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். கதையைக் கேட்டதும் அவரே இதில் நடிக்கிறேன் எனச் சொல்லி விரும்பி நடிக்க வந்தார்,” என்றார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் இதுவரை இயக்கிய "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!