
இன்னொரு அஜித் பட ரீமேக் : சிரஞ்சீவி ஆர்வம்
தற்போது "ஆச்சார்யா" என்ற நேரடித் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அதற்கடுத்து மலையாள "லூசிபர்" ரீமேக், தமிழ் "வேதாளம்" ரீமேக் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இதனிடையே, அஜித் நடித்த "என்னை அறிந்தால்" படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். அப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஏற்கெனவே சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனம் தான் வாங்கி வைத்துள்ளதாம்.
தற்போது திட்டமிட்டுள்ள படங்களை முடித்துவிட்டு அந்தப் படத்தைச் செய்யலாம் என யோசித்து வருகிறாராம். நேரடிப் படங்களை விட ரீமேக் படங்கள் கொஞ்சம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!