
15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரும் மம்தா மோகன்தாஸ்
சுமார் 15 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் "ஊமை விழிகள்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கடுத்து விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் "எனிமி" படத்திலும் ஆர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இத்தனை வருட இடைவெளியில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க வருவது ஆச்சரியமான விஷயம்தான். கடந்த வருடம் வெளிவந்த "பாரன்சிக்" மலையாளப் படத்தில் மம்தாவின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
மலையாளத்தில் பல படங்களில் நடித்துள் மம்தா சிறந்த பாடகியும் கூட. தமிழில் விஜய் நடித்து வெளிவந்த "வில்லு" படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான "டாடி மம்மி வீட்டிலில்ல" பாடலைப் பாடியவர் மம்தா தான். பின்னர் "கோவா" படத்திலும் பாடியிருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!