
அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய நாகபந்தம்
நிகழ்ச்சியில் பேசிய ஹீரோ விராட் கர்ணா, ""கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங்கிய அதே அன்பையும் ஆசீர்வாதத்தையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். இந்த ரதயாத்திரையின் ஒரு பகுதியாக பல நகரங்களுக்கு பயணம் செய்ய இருக்கிறோம். ரசிகர்கள் எங்கள் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்"" என்றார்.
இயக்குனர் பேசுகையில், ""இது புரமோஷன் நிகழ்ச்சி மட்டுமல்ல. நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வேர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு முயற்சி. அதை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இதை பார்க்கிறோம். இந்த முயற்சி அனைவரின் மனதையும் தொடும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் அனந்த பத்மநாப சாமி சிலை திறக்கப்பட்டதும் ஆசீர்வாதம்"" என்றார்.
இந்தியாவின் பழமையான விஷ்ணு கோவில்களின் பின்னணியில், புராணம் மற்றும் சாகசங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் பான்-இந்தியா திரைப்படம் "நாகபந்தம்". புனித ரகசியங்களையும், நாகபந்தம் தொடர்பான மர்மங்களையும் தேடிச் செல்லும் ஒரு அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு ,ண்யா பொன்வண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!