ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல்
மார் 16, 2026
Advertisement
தெலுங்கில் தயாராகி வரும் படம் "நாகபந்தம்". அபிஷேக் நாமா இயக்கும் இந்த படத்தில் விராத் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளிசர்மா, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அபே பாடல்களுக்கு இசை அமைக்கிறார், ஜுனித் குமார் பின்னணி இசை அமைக்கிறார். கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிக்கிறார்கள்.
இந்த படத்திற்காக கடவுள் நமோ நாராயணரின் புகழ்பாடும் "நமோ ரே" என்ற பக்தி பாடல் உருவாகி உள்ளது. இதற்கு பிரமாண்ட கோவில் செட் அமைத்து ஆயிரம் பாரம்பரிய நடன கலைஞர்களை கொண்டு உருவாகி உள்ளது. இந்தியாவின் நடன கலைகள் அனைத்தையும் ஒரே பாடலுக்குள் கொண்டு வந்துள்ளனர். கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ளார். நாயகி நபா நடேஷ் முன்னணியில் நடனமாடி உள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோ மற்றும் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த பாடல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!