
பெரும் வரவேற்பைப் பெற்ற நாகபந்தம் டீசர்
அபிஷேக் நமா இயக்கத்தில், ஜுனைத்குமார், அபே இசையமைப்பில், விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் "நாகபந்தம்" படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு யு டியுப் தளத்தில் வெளியானது. வளரும் நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
யு டியூபில் மட்டும் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஆன்மிகம் கலந்த படங்களை இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் விரும்பிப் பார்கக் ஆரம்பித்துள்ளனர். தெலுங்குப் படமாக உருவாகி, மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாக உள்ள இப்படத்திற்கான வரவேற்பு படத்தின் வியாபாரத்திற்கு பெரிதும் உதவும். இந்த வருட கோடை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!