
யஷ் கதையில் தனுஷ்: சஞ்சய் பன்சாலி தயாரிக்கிறார்
"இரும்புத்திரை, ஹீரோ, சர்தார்" ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். தற்போது பி.எஸ்.மித்ரன் கார்த்தியை வைத்து "சர்தார் 2" படத்தை உருவாக்கியுள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக பி.எஸ். மித்ரன் உள்ளார்.
சமீபத்தில் பி.எஸ்.மித்ரன் , நடிகர் தனுஷூக்கு கதை கூறியுள்ளார். இந்த படத்தை யார் தயாரிப்பார் என்பது குறித்த தகவல் இல்லை. இன்னும் ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது என்கிற தகவலை தெரிவித்திருந்தோம். தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை பாலிவுட்டில் பிரபல இயக்குனர் ஆன சஞ்சய் லீலா பன்சாலி தனது பன்சாலி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார். மேலும், தனுஷூக்கு கூறியுள்ள கதையை முதலில் பி.எஸ். மித்ரன் கன்னட நடிகர் யஷ்ஷிற்கு கூறியுள்ளார். அவர் "டாக்சிக், ராமாயணா" ஆகிய படங்களில் கவனம் செலுத்துவதால் இப்படம் கைகூடவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!