
ரஜினி 173 படத்திற்கு மீண்டும் சிக்கல் ?
அடுத்து "டான்" படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக ஜனவரி மாதம் அறிவித்தார்கள். அவரும் படத்தின் கதை ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தகவல் வந்தது.
இந்நிலையில் தெலுங்கில் அவர் படம் இயக்குவதற்காக வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும், முன் தயாரிப்புக்காக செலவு செய்த தொகைகளையும் தர வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளதாம். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.
வாங்கிய அட்வான்ஸ் தொகையை மட்டும் திருப்பித் தருகிறேன் என இயக்குனர் சிபி தரப்பில் சொல்லப்படுகிறதாம். பஞ்சாயத்து சுமூகமாக முடிந்த பிறகே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.
"ரஜினி 173" படத்திற்கு இப்படி தடங்கல் மேல் தடங்கல் வருவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!