
எங்களை நாங்களே கலாய்ச்சிப்போம் : எல்ஐகே குழு
கடைசியாக ஏப்ரல் 3 வெளியாகும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள். அந்த நாளிலும் வெளியாகாது என கடந்த சில நாட்களாக தகவல் வந்தது. நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு ஏப்ரல் 10ல் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.
படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ள அந்த வீடியோவில் பட வெளியீடு தள்ளிப் போனது குறித்து அவர்களை அவர்களே கலாய்த்துக் கொண்ட வீடியோவாக அது உள்ளது.
இத்தனை முறை படம் தள்ளிப் போனது குறித்து சமூக வலைத்தளங்களில் நிறைய "டிரோல்கள்" வெளிவந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் ஏப்ரல் 3 வெளியீடு குறித்து கண்டு கொள்ளாமல் எந்தப் பதிவும் போடாமல் இருந்த பிரதீப் ரங்கநாதனும் இந்த வீடியோவில் நடித்து, அதை நேற்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளார்.
ஏப்ரல் 10ல் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" கண்டிப்பாக வந்துவிடும் என்று நம்புவோம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!