
கல்லூரி விழாக்களில் நடிகைகளின் கிளாமர் நடனம் : சமூக வலைத்தளங்களில் கண்டனம்
ஆனால், சமீப காலங்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நடிகைகள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள். சில இடங்களில் புதிய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. அவற்றில் கலந்து கொள்ளும் "சில நடிகைகள்" கிளாமராக ஆடை அணிந்து பங்கேற்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அதையும் மீறி "சில நடிகைகள்" கிளாமர் நடனம் ஆடுவது ஆரம்பமாகி உள்ளது. கல்லூரி நிகழ்ச்சிகளில் நடிகைகளைப் பங்கேற்று நடனமாடுவது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக அப்படி நடனமாடிய சில நடிகைகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அவை அதிகமாகவும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
சினிமா மற்றும் அரசியல் சார்பு இல்லாமல் கல்லூரிகள் நடக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். படிப்பதற்காக அனுப்பப்படும் தங்களது மகன், மகள்கள் இப்படியான நிகழ்வுகள் மூலம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படலாம் என்பதால் சமூக வலைத்தளங்களில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பெற்றோர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!