
காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய ஜனநாயகன்
2016ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த "பேட்மேன் Vs சூப்பர்மேன் - டான் ஆப் ஜஸ்டிஸ்" படத்தின் போஸ்டர் ஒன்றிலிருந்து "ஜனநாயகன்" பட போஸ்டரைக் காப்பியடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
இன்றைய ஓடிடி, ஏஐ யுகத்தில் எந்த போஸ்டரை, எந்தக் கதையை, எந்தப் பாடலை எங்கிருந்து "சுட்டார்கள்" என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அப்படியிருக்கும் போது விஜய் போன்ற டாப் நடிகர் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரை இப்படி காப்பியடித்திருப்பது மீண்டும் "காப்பி" சர்ச்சை உருவாகக் காரணமாகிவிட்டது.
இனி வெளியாக உள்ள போஸ்டர்களிலாவது இயக்குனர் எச் வினோத் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!