
கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி
மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் என்ற ஊரில் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். தங்களது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடும் வீடியோ ஒன்றை சூரி இரண்டு தினங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர், “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை.” என்று கிண்டலடித்து கமெண்ட் போட்டிருந்தார். அந்த நபருக்கு சரியான விதத்தில் பதிலடி கொடுத்துள்ளார் சூரி.
“திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்,” என பதிலளித்துள்ளார்.
உழைப்பால் உயர்ந்த சிலரது உயர்வைப் பார்த்து பொறாமைப்படும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!