
பராசக்தி பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல்
சுதா கொங்கராவின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார் தான் இந்தப் படத்திற்கும் இசை. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் எக்ஸ் தளத்தில் தகவலை வெளியிட்டுள்ளார். படம் வெளியாக இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே படத்தின் புரமோஷன் வேலைகளை ஜிவி ஆரம்பித்து வைக்கிறார்.
ஜிவி பிரகாஷ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்த "அமரன்" படம் இசை ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு படம். சுதா கொங்கரா - ஜிவி பிரகாஷ் கூட்டணி தேசிய விருதைப் பெற்ற ஒரு கூட்டணி. எனவே, "பராசக்தி" பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!