
சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ்
இயக்குனர் விசுவிடம் உதவியாளராக பணியாற்றவர் கஸ்துாரிராஜா. தனுஷ், அவர் அண்ணன் செல்வராகவன், சகோதரிகள் 2 பேர் என, குடும்பத்தில் மொத்தம் 4 குழந்தைகள். ஒரு கால கட்டம்வரை அந்த குடும்பம் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறது. கஸ்துாரிராஜா இயக்குனர் ஆனபின் ஓரளவு வசதி ஆனார்கள். பின்னரும் சில படங்களால் அவர் கடனாளி ஆக, மீண்டும் கஷ்டப்பட்டார்கள்.
நடிகராக தனுஷ் ஜெயித்த பின்னரே அந்த குடும்பம் பொருளாதார ரீதியில் மீண்டார்கள். இப்போது தனுஷ், அவர் அண்ணன், சகோதரிகள் என அனைவருமே கோடீஸ்வரர்கள். ஆனாலும் பழசை மறக்காத தனுஷ், தான் பட்ட கஷ்டங்களை இத்தனை ஆண்டுகள் கழித்து மேடையில் சொல்லி வருகிறார். அவரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தின் சீன்களாக இருக்கிறது. இட்லி கடை படம் பலரை அழ வைக்கும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!