
இட்லி கடை கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக "இட்லி கடை" இதுதான் என ஒரு கதையை உலவ விட்டுள்ளார்கள். அந்தப் பதிவையும் பலர் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர். அந்தக் கதையை படித்துப் பார்த்தால், ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்து வெளிவந்த "மிஸ்டர் பாரத்" கதை போலவே உள்ளது.
படம் வந்த பிறகுதான் சமூக வலைத்தளங்களில் உலவும் கதை உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும். அதுவரை அந்தக் கதை இன்னும் அதிகமாகவே சுற்றி வரும். அந்தக் கதை இதோ,
“பரம்பரை பணக்காரர் சத்யராஜ் 5 star hotel வச்சிருக்கார். திடீர்னு அவர் ஹோட்டல்ல வர்ற ஆளுங்க கம்மி ஆகுறாங்க. என்னானு பாத்தா, இவர் ஹோட்டல் ஆப்போசிட்லயே ஒரு சின்ன பையன் இட்லி கடை போட்ருக்கார். அவர் தான் தனுஷ். ஆரம்பத்துல அடியாட்களை அனுப்பினாலும், ஒரு கட்டத்துல அப்டி அந்த இட்லில என்னதான் இருக்குனு பாக்குறதுக்கு கூட்டத்தோட கூட்டமா போய் சாப்பிடுறார். அந்த இட்லிய நாக்குல வச்சதும் 25 வருஷத்துக்கு முன்னாடி தான் ஏமாற்றிய காதலி சமைச்சு எடுத்துட்டு வந்த இட்லியும், தனுஷ் விக்கிற இட்லியும் ஒரே டேஸ்ட்ல இருக்கு.. அப்டியே தனுஷ் பின்னாடி பாத்தா இட்லி கடையில தான் பழைய காதலி போட்டோ இருக்கு. அவர் தான் தனுஷோட அம்மா.. தனுஷ் தான் புள்ளைன்னு தெரிஞ்சு தன்னோட சொத்தை தனுஷிற்கு எழுதி வச்சாரா... இரண்டாவது சம்சாரத்துக்கு பொறந்த அருண் விஜய் இத தெரிஞ்சுக்கிட்டு அவர அண்ணனா ஏத்துக்கிட்டாரா... என்கிறது தான் படத்தோட மீதி கதை..."”.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!