
15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பிஜூ மேனன்
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு "மதராஸி" படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், “ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், "மதராஸி" படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி. எனது கதாபாத்திரத்தை அற்புதமாக அமைத்துள்ளார் அவர். நான் அனிருத்தின் பெரிய ரசிகன். சிவகார்த்திகேயனும் சிறப்பாக வளர்ந்துள்ளார். மலையாளத்திலும் தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது,” என்று பேசினார்.
பிஜூ பற்றி சிவகார்த்திகேயன் பேசுகையில், “பிஜூ மேனன் சாரின் ரசிகன் நான். குறிப்பாக "அய்யப்பனும் கோஷியும்" படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பானது. குரலை எப்படி ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடிப்பது என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்,” எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!