
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம்
திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. "பாலன்" திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மலையாள திரையுலகில் களமிறங்குகிறது என்பதால் இது மலையாள படம், தமிழிலும் வரும் என தெரிகிறது. யஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படம், தமிழில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் ஹிந்தியில் பிரியதர்ஷனின் திரில்லர் திரைப்படம் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
பாலன் படம் தலைப்புக்கு ஏற்ப அம்மா, மகன் சம்பந்தப்பட்ட கதை. அதில் நடிப்பவர்கள் புதுமுகங்கள், மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஆவேஷம் படத்தின் கதாசிரியர் ஜீத்து மாதவன் இந்த படத்துக்கும் கதை எழுதியிருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!