
பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம்
அடுத்து தானே "சின்னத்துரை" என்ற படத்தை இயக்கினார். அதுதான் அவரது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வழுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய "இருமன கன்னிகள்" என்ற நாவலை திரைப்படமாக்கினார். இது ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதை.
இதில் அவருடன் எஸ்.வரலக்ஷ்மி, பி.ஆர்.பந்துலு, டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, ஜே.பி.சந்திரபாபு, ஜி.சகுந்தலா, எஸ்.ஆர்.வரலட்சுமி, கே.சயீராம், "ஸ்டண்ட்" சோமு, "ஜெயக்கொடி" கே.நடராஜன், கே.எஸ்.ஹரிஹரன், ராமையா சாஸ்திரி, கே.ராமு, வேணுபாய், கே.எஸ்.அங்கமுத்து மற்றும் சி.ஆர்.ராஜகுமாரி, சௌதாமினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
இந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளால் தன் சொத்துக்களை இழந்தார். அடுத்துவந்த நான்கு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி இருந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து "மாலையிட்ட மங்கை" படத்தின் மூலமாக திரையுலகில் மீண்டு வந்தார். அதன்பிறகு எம்ஜிஆர், சிவாஜியின் காலம் வரை நடித்துக் கொண்டிருந்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!