
கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல்
சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தில் நாயகியின் தங்கையாக அறிமுகமானவர் மிஷா கோஷல். அதன்பிறகு நான் மகான் அல்ல, 180, 7ம் அறிவு, முகமூடி, ராஜா ராணி, வணக்கம் சென்னை, வடகறி, விசாரணை, குற்றம் 23, மெர்சல், லத்தி, ரத்தம் உள்ளிட்ட படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் இது.
படம் குறித்து இயக்குனர், பிரியா கார்த்திகேயன் கூறும்போது "பேரடாக்ஸ் என்றால் "முரண்பாடு" என்று தமிழில் பொருள்படும் இந்த தலைப்பு, மனித உளவியல் சார்ந்த கதைக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் உளவியல் பற்றி இந்த படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறான். இந்த நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. இதை தொடர்ந்து என்ன ஆகிறது? என்பதே கதை"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!