
‛கூலி படத்திலிருந்து ‛மோனிகா பாடல் வெளியீடு
ஏற்கனவே கூலி படத்திலிருந்து ‛சிக்கிட்டு" என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே ஆடியுள்ள ‛மோனிகா" பாடலை இன்று(ஜூலை 11) மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். விஷ்ணு எடவன் எழுதி உள்ள இந்த பாடலை சுபலாஷினி மற்றும் அனிருத் பாடி உள்ளனர். துறைமுகம் பின்னணியில் துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது. அதேசமயம் ‛ஜெயிலர்" படத்தில் தமன்னா ஆடிய ‛காவாலா" பாடல் ரேஞ்சுக்கு இது அமையவில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!