
எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம்
கலையரசன் கூறும்போது ""சமூக வலைதளத்தில் பிரபலமாக எந்த எல்லைக்கும் செல்லலாம் என நினைக்கும் தம்பதி பற்றிய கதை இது. வாழ்க்கையின் அழகான விஷயங்களை, தருணங்களை சோஷியல் மீடியா எப்படியெல்லாம் அழிக்கிறது? என்பது கதைக்களம். கடைசி 15 நிமிடங்கள் வரும் "கிளைமேக்ஸ்" காட்சி, அனைவரையும் சீட்டின் நுனியில் அமரவைக்கும்" என்றார்.
பின்னர் கலையரசனிடம் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது ""இது பொய்யான தகவல். எனக்கு மேனேஜரே கிடையாது. நான் அவ்வளவு சம்பளம் வாங்குவதும் இல்லை. எனக்கு அவ்வளவு பெரிய தொகையை யாரும் கொடுப்பதும் கிடையாது. மாதம் ரூ.30,000 சம்பளம் கிடைக்குமா? என்று இருந்த நான், இன்று ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறேன்.
நல்ல படங்களுக்காக எனது சம்பளத்தையும் குறைத்துக் கொள்கிறேன். ஓரிரு படங்களில் சம்பளம் கூட இன்னும் தராமல் இருக்கிறார்கள். அந்த பணம் கிடைத்தால் போதும், அதை கொண்டு நானே இரு படங்கள் தயாரிப்பேன்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!