
கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா
இந்து நிலையில் தற்போது கோவில் வாசலில் இயந்திர யானைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பார்ப்பதற்கு நிஜமான யானை தோன்றும் இவற்றுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பும் இருக்கிறது.
இந்த நிலையில் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை திரிஷா வழங்கியுள்ளார். இந்த இயந்திர யானைக்கு "கஜா" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகளையும், தும்பிக்கை, வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. தும்பிக்கையால் தண்ணீர் பீச்சி அடிப்பதோடு ஆசிர்வாதமும் வழங்குகிறது. இந்து யானையை அந்த பகுதி மக்கள் "திரிஷா யானை என்று குறிப்பிடுகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!