
பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட பச்சைக்கொடி
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை நடத்தினார். நடிகராக ஒரு புதுமுகத்தை தேர்வு செய்து வைத்திருந்தார். நாயகியாக அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ரஞ்சனியை தேர்வு செய்திருந்தார்.
படத்தின் பூஜையும் பிரமாண்டமாக நடந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தார். படத்திற்காக "பூஜைகேத்த பூவிது" பாடலையும் ரஞ்சனியை வைத்து படமாக்கினார்.
இதற்கிடையில் முதல் மரியாதை படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக் கொண்டதும் "பச்சைக்கொடி"யை அப்படியே விட்டு விட்டு அந்த படத்தை இயக்க தொடங்கி விட்டார். பச்சைக்கொடிக்காக தேர்வான ரஞ்சனியை "முதல் மரியாதை" படத்தில் நடிக்க வைத்தார். "பூஜைக்கேத்த பூவிது" பாடல் "நீதானா அந்த குயில்" என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் "பச்சைக்கொடி" கதையை பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் இயக்கினார். பாண்டியராஜன், நிரோஷா, ஜனகராஜ், நடித்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!