
நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் மேலாளர் பாலமுருகன் என்பவரின் தூண்டுதலின் பேரில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சங்கர்பாபு மற்றும் முன்னாள் உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து "எவர்கிரீன் மீடியா" என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த நிறுவனம் நடிகர் சங்கத்தின் ஒரு நிறுவனம் என்று சட்டவிரோதமாக விளம்பரம் செய்து வருகிறார்கள். நடிகர் சங்க பெயரை பயன்படுத்தி அனைத்து உள்ளூர், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்கான உரிமைகளை பெற்று, அதன் மூலம் பல நபர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மோசடியாக ஏமாற்றி வந்துள்ளனர். அந்தவகையில் சுமார் ரூ.40 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே நடிகர் சங்கத்தின் பெயரையும், எங்களின் அலுவலக முகவரியையும், சங்க நிர்வாகிகளின் பெயரையும் தவறாக பயன்படுத்தி, சங்கத்தை ஏமாற்றி மோசடி செய்து வரும் பாலமுருகன், சங்கர் பாபு, சதீஷ்குமார் ஆகியோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய விசாரணை நடத்தவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!