
என்னாச்சு கேர்ள் பிரண்டுக்கு? : ரசிகர்களை அமைதிப்படுத்திய ராஷ்மிகா
ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ராஷ்மிகாவே டப்பிங் பேசியிருக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடமே வெளியான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் எதுவும் வெளியாகாததால் ராஷ்மிகாவின் ரசிகர்கள் பொறுமை இழந்து "ரிலீஸ் த கேர்ள் பிரின்ட்" என்கிற ஹேஸ்டேக்கை எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் ஆக்க துவங்கினர்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக ராஷ்மிகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களை நாங்கள் காக்க வைத்திருக்கிறோம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுடைய ட்ரெண்டிங் உண்மையிலேயே மதிப்பு மிக்க ஒன்று. அதேசமயம் இந்த படத்தின் மிகச்சிறந்த அவுட்புட்டை கொடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் ராகுல் ரவீந்திரன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதுவரை வெளியான படங்களிலேயே இது கொஞ்சம் வித்தியாசமான அம்சம் கொண்ட படமாக இருக்கும் என என்னை உறுதியாக நம்பலாம்” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!