
லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு
பிரதீப் ரங்கநாதன் நடித்து இந்த வருடம் பிப்ரவரி 21ம் தேதி வெளிவந்த "டிராகன்" படம் பெரும் வெற்றி பெற்று 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அவர் நடித்து வரும் மற்றொரு படமான "டூயுட்" படம் தீபாவளிக்கு வெளியாகும் என இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள். தற்போது "லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி" படத்தின் வெளியீட்டு அறிவிப்பும் வந்துள்ளது. ஆக, இந்த வருடத்தின் வெளியீட்டுப் பட்டியலில் பிரதீப் நாயகனாக நடித்துள்ள மூன்று படங்கள் இடம் பிடிக்க உள்ளன.
"லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி" வெளிவந்த ஒரு மாதத்திற்குள்ளாக "டூயுட்" வர உள்ளது. இரண்டுமே வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தால் தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றியுடன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துவிடுவார் பிரதீப் ரங்கநாதன்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!