
தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல்
ஆனால், சமீபத்திய தமிழ் சினிமா இசையில் தமிழின் அழகு குறைந்து, கவிதை நயம் குறைந்து, ஆங்கிலக் கலப்புடன், மற்ற மொழிக் கலப்புடன் கூடிய பாடல்கள்தான் அதிகம் வருகிறது என சினிமா இசையை ஆத்மார்த்தமாக ரசிக்கும் பலரும் குறை சொல்வார்கள். இன்றைய இசையைமப்பாளர்களைக் கேட்டால் அதற்கு "தலைமுறை இடைவெளி, டிரென்ட்" என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சமாளிப்பார்கள்.
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தமிழில் சில படங்களில் நடித்தவருமான அனுராக் காஷ்யப் இன்றைய தமிழ் சினிமா இசையைப் பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தெலுங்கு பான் இந்தியா படங்களுடன் தமிழ் சினிமாவும் போட்டியிட விரும்புகிறது. தமிழ்ப் பாடல்கள் கூட ஆங்கிலத்தில் இருக்கின்றன. வெளிநாட்டில் உள்ள ராக் பேண்டு குழுவினர் தமிழுக்கு வந்து, "ஐயாம் கமிங் பார் யு, ஐயாம் கன்னிங் பார் யு" என திடீரென பாட ஆரம்பித்துவிட்டார்கள். இது தமிழ் சினிமா இசை அல்ல. தமிழ் சினிமா பாடல்களை நாங்கள் ஹிந்தியில் வாங்கிய காலம் ஒன்று இருந்தது. ராஜா சார் முதல் மற்றவர்கள் வரை வாங்கியிருக்கிறோம். இப்போது அவை எனக்குப் புரியவில்லை,” என்று பேசியிருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!