
இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி நட்பில் விரிசல்?
பின்னர் இயக்குனர் பூரியுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டார் சார்மி. பூரி இயக்கிய ஏழு படங்களில் சார்மியும் இணை தயாரிப்பாளர்.
2022ல் பூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த "லிகர்" படம் படுதோல்வியைத் தழுவியது. கடந்த வருடம் அவர் இயக்கிய "டபுள் ஐஸ்மார்ட்" படமும் தோல்வியைத் தழுவியது. இதனால், தெலுங்கு நடிகர்கள் யாரும் பூரியின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை.
மீண்டும் வெற்றி கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது நான்கைந்து கதைகளை எழுதி வைத்திருக்கிறாராம் பூரி. ஆனால், அவர் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் சார்மி இணை தயாரிப்பாளராக இருக்கக்கூடாது என சில நடிகர்கள் "டிமாண்ட்" வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால், பூரி, சார்மி நட்பில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!