
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர்
அந்த அணியை விட்டு விலகிய பின்பும் தெலுங்கு சினிமா மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. அவரை தெலுங்கு சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தார்கள். இப்போது நிதின் நாயகனாக நடிக்கும் "ராபின்ஹுட்" தெலுங்குப் படத்தில் டேவிட் வார்னர் அறிமுகமாக உள்ளார்.
அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவிசங்கர் இது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்க ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளார்.
படத்தில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை டேவிட் வார்னர் பெற்றதாக டோலிவுட் தகவல். இந்தப் படம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!