
துபாய் கார் ரேஸில் இருந்து விலகினார் அஜித்
இந்நிலையில் ரேஸில் இருந்து அஜித் விலகுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இதுதொடர்பாக அஜித் குமாரின் ரேஸிங் அணி சார்பில் வெளியிட்ட அறிக்கை : ‛‛பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து, உடல் நலன் மற்றும் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு துபாய் 24H கார் ரேஸில் இருந்து அஜித் விலகுகிறார்.
மிகவும் தீவிரமான ஆலோசனைக்கு பிறகு, துபாய் 24 எச் ரேஸில் இருந்து அஜித்குமார் விலகுவது என்ற கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, அவரின் தனிப்பட்ட லட்சியங்களை தாண்டி அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
அஜித் குமார் ரேஸிங் சார்பில் 414, 901 என இரு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒரு அணியில் மட்டும் ரேஸராக அஜித் பங்கேற்கவிருந்த நிலையில் தற்போது விலகியுள்ளார். எனினும் அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார். கடினமான மற்றும் தன்னலமற்ற இந்த முடிவை அஜித்தே எடுத்துள்ளார். அஜித் அணி தொடர்ந்து ரேஸில் போட்டியிடும்"" என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!