
சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது ஆந்திர உயர்நீதிமன்றம்
கடந்த மாதம் "புஷ்பா 2" படம் வெளிவந்த போது ஹைதராபாத்தில் நடந்த நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தெலங்கானா அரசு அறிவித்தது. ஆனால், "கேம் சேஞ்ஜர்" படத்திற்கு யு டர்ன் போட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து தெலங்கானா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார். அனுமதி தர மாட்டோம் என்று சொல்லிவிட்டு அனுமதி வழங்கியது ஏன் என்றும் கேட்டார். தூக்கத்தைக் கெடுத்து சினிமா பார்க்க வேண்டுமா என்றும் கேட்டுள்ளார். வழக்கை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
இதனிடையே, ஆந்திர உயர்நீதிமன்றம் இது குறித்து தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி அனுமதி வழங்கப்பட்ட அதிகாலை 1 மணி 4 மணி காட்சிகளை ரத்து செய்துள்ளது. அதனால், பொங்கல் வெளியீட்டில் எந்த தெலுங்குப் படத்திற்கும் அதிகாலை காட்சிகள் நடக்காது.
வரும் நாட்களில் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்புக் காட்சிகள், சிறப்புக் கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பில்லை. நீதிமன்றம் தலையிட்டுவிட்டதால் மாநில அரசுகள் அப்படியான அனுமதியிலிருந்து பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!