
பிளாஷ்பேக் : கங்கை நதியின் கதை
புராணங்கள் மற்றும் செவி வழி கதைகளின் அடிப்படையில் கங்கை நதி எப்படி பூமிக்கு வந்தது. அது பெண்ணாக, பின்னர் கொடூர துர்தேவதையாக மாறி கடைசியாக சிவனின் தலையில் எப்படி அவரது துணைவியாக மாறியது என்பது விளக்கமாக சொன்ன படம்.
அன்றைக்கு பிரபலமாக இருந்த என்.சி.வசந்தகோகிலம் கங்கையாக நடித்தார். கங்கை பூமிக்கு வர காரணமாக இருந்த அயோத்தி மன்னன் பகீரதனாக நாகர்கோவில் கே.மகாதேவன் நடித்தார். டி.எஸ்.தமயந்தி பார்வதியாக நடித்தார். எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வரும் காந்தர்வ கன்னியாக நடித்தார். சி.வி.பந்துலு சிவனாக நடித்தார்.
இவர்கள் தவிர ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். காளி என் ரத்தனம் தலைமையிலான காமெடி நடிகர்கள் தனி டிராக்காக காமெடி காட்சிகளில் நடித்தனர். முழு படமும் அடையார் சுந்தரம் ஸ்டூடியோவில் படமானது. இந்த ஸ்டூடியோதான் பிற்காலத்தில் எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோ ஆனது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!