
என் அம்மா கமலா காமேஷ் நலமாக உள்ளார், இறந்தது என் மாமியார் - உமா ரியாஸ் விளக்கம்
இதுபற்றி கமலா காமேஷின் மகளும், நடிகையுமான உமா ரியாஸை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛என் அம்மா பற்றி வெளியான செய்தி தவறானது. என் அம்மா கமலா காமேஷ் நலமாக உள்ளார். இறந்தது என் மாமியார் ரஷீதா பானு, 72. வயதுமூப்பு மற்றும் உடல்நல பிரச்னையால் சென்னையில் இறந்துவிட்டார்"" என்றார்.
உமா ரியாஸ், நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்தார். ரியாஸின் அம்மா ரஷீதா தான் இறந்துவிட்டார். ஆனால் உமா ரியாஸின் அம்மா கமலா இறந்துவிட்டது போன்று தவறாக செய்தி பரவிவிட்டது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!