
கொஞ்சம் சீரியஸா இருங்க : பஹத் பாசிலையும் ஜோதிர்மயியையும் சத்தம் போட்ட இயக்குனர்
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவம் குறித்து ஜோதிர்மயி கூறும்போது, “நானும் பஹத் பாசிலும் நடிக்கும் காட்சிகளை படமாக்கிய போது ஒரு முறை சீரியஸ் ஆன காட்சியில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே அடிக்கடி சிரித்து விட்டோம். இதனால் அந்த காட்சியை பலமுறை எடுக்க வேண்டி இருந்தது. இதனால் கோபமான இயக்குனர், என் கணவர் அமல் நீரத் எங்களிடம் வந்து, ரெண்டு பேரும் கொஞ்சம் சீரியஸ் ஆக இருங்கள். நீங்கள் இருவரும் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று சொன்னார். அதன் பிறகு தான் நாங்கள் கொஞ்சம் சீரியஸ் ஆகி அந்த காட்சியில் நடித்து முடித்தோம்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!