
புத்தாண்டில் காத்திருக்கு ‛விஜய் 69 பட சர்ப்ரைஸ்
டிச 07, 2024
Advertisement
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது 69வது படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்து வருகிறார். கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் உடன் இணைந்து நாயகியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. அதோடு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை 2025ம் ஆண்டு ஜனவரி 1, ஆங்கில வருடபிறப்பன்று வெளியிடுவதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!