
இந்தியா முதல் நாள் வசூல் 2024 - டாப் 3 இடங்களில் தெலுங்குப் படங்கள்…
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த "புஷ்பா 2" படம் முதல் நாள் வசூலாக 294 கோடியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த "கல்கி 2898 ஏடி" படம் 191 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தையும், ஜுனியர் என்டிஆர் நடித்து வெளிவந்த "தேவரா" படம் 172 கோடி வசூலையும் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
நான்காவது இடத்தில் 126 கோடி வசூலித்து விஜய் நடித்து தமிழில் வெளிவந்த "தி கோட்" படமும் உள்ளது.
புஷ்பா 2 - தனிப்பெரும் சாதனை
இவற்றில் "புஷ்பா 2" படம் 110 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்திய சினிமாவில் முதன் முதலில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படம் என்ற தனிப்பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்தப் படம் ஒரு தெலுங்கு மொழிப் படம் என்பது தெலுங்கு சினிமாவிற்குப் பெருமையான ஒன்றாக அமைந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!