
புஷ்பா 2 - முதல் நாளில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் சாதனை வசூல்
தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியாவது பல வருடங்களாக நடந்து வருகிறது. "பாகுபலி 2" படத்திற்குப் பின் மற்ற தென்னிந்திய மொழிகளான கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது.
"பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி, தேவரா" ஆகிய படங்கள் புரியாத முதல் நாள் வசூல் சாதனையை தற்போது "புஷ்பா 2" படம் புரிந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாள் வசூலாக 11 கோடியும், கர்நாடகாவில் 23 கோடியும், கேரளாவில் 6 கோடியுமாக வசூலித்துள்ளது. இதுவரை வெளியான எந்த ஒரு தெலுங்குப் படத்திற்கும் கிடைக்காத முதல் நாள் வசூல் இது என அதிகாரப்பூர்மாக வெளியிட்டுள்ளார்கள். அடுத்து மொத்த வசூலிலும் இப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!