
படப்பிடிப்பிலிருந்து பவன் கல்யாண் செல்பி
துணை முதல்வராதவற்கு முன்பாக அவர் நடித்து வந்த சில படங்களின் படப்பிடிப்புகள் அப்படியே நின்று போனது. அதில் தற்போது "ஹரிஹர வீர மல்லு" படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின் செல்பி ஒன்றை எடுத்து, “பரபரப்பான அரசியல் வேலைகளுக்கு நடுவே கடைசியாக நீண்ட நாட்களாக காத்திருந்த வேலையில் சில மணி நேரங்கள் தர முடிந்தது, ஹரிஹர வீரமல்லு,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாவதை முன்னிட்டு படத்தின் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனக துர்கா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!