
நானும் கட்சி தொடங்குவேன் : பார்த்திபன் சொல்கிறார்
இந்த ஆண்டு விவாகரத்து ஆண்டு போல. அதனால்தான் திரைத்துறையில் நிறைய விவாகரத்து செய்திகள் வந்துள்ளது. இசையமைப்பாளர் ரஹ்மானுடன் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக பழகியுள்ளேன். அவர் மிகவும் தூய்மையானவர். அவரை போல ஒரு சிறந்த மனிதர் உலகிலேயே கிடைக்க மாட்டார். அதனால்தான் விவாகரத்து அறிவித்த அவரது மனைவியே அவரைப் பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர்கள் விவாகரத்து விஷயத்தில் நாம் தலையிட்டு இருக்கக் கூடாது. அவசரப்பட்டு கருத்து கூறிவிட்டோமோ என தோன்றுகிறது.
விஜய்யின் அரசியலை தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக பார்க்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வரும்போது கூட இவர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள் என விமர்சனங்கள் இருந்தது. அதுபோல விமர்சனங்கள்தான் தற்போது விஜய்க்கும் உள்ளது. ஆனால் அவருடைய எழுச்சி என்பது மிகவும் பிரமாதமாக உள்ளது. எனக்கும் அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளது. நானும் ஒரு நாள் கட்சி ஆரம்பிப்பேன், என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்காது. புதிய பாதை தொடங்கி என்னுடைய அனைத்து படங்களிலும் அரசியல் உள்ளது. எனக்கும் அரசியல் விருப்பம் உள்ளது, ஆனால் அது இப்போதைக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!