
ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை
நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏ.ஆர்.ரஹ்மான் சில நாட்களுக்கு முன் அவரது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தகவலை முன்னணி நாளிதழ்கள் உட்பட பலரும் செய்தியாக வெளியிட்டனர். ஆனால், சில சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், பல யூ-டியூபர்களும், ஏ.ஆர்.ரஹ்மானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதுாறு கருத்துகளை, தங்களின் சொந்தக் கற்பனைக்கு உட்படுத்தி, பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், குடும்பத்தாரை புண்படுத்தும் வகையிலும், வெளியிடப்பட்ட அப்பதிவுகளில் துளி அளவும் உண்மையில்லை. இது ஒரு மலிவான செயல்.
அடுத்த ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து குறித்த அவதுாறு கருத்துகளை சமூக வலைதளங்கள், யூ-டியூப்பிலிருந்து அகற்ற வேண்டும். அப்படி அகற்றாதவர்கள் மீது பாரதிய நியாயா சன்ஹிதா 356வது பிரிவின் கீழ் அவதுாறு வழக்கு தொடுக்கப்படும். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். குறிப்பாக யூ-டியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஆன்லைன் செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் தனி நபர்கள், நிறுவனங்களுக்காக இந்த நோட்டீஸ் அனுப்பபடுகிறது. தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!