
ஆரம்பத்திலேயே தடுமாறும் கார்த்தியின் புதிய படம் ?
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது. இயக்குனர் கல்யாண் சங்கர் காட்சிகளை படமாக்கிய விதத்தில் கார்த்திக்கு திருப்தி இல்லையாம். அதனால், கதை, திரைக்கதையை மாற்றி எழுத சொன்னதாகவும், அதற்குப் பிறகு படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றதாகவும் தகவல்.
"மேட், மேட் ஸ்கொயர்" ஆகிய படங்களை இயக்கியவர் கல்யாண் சங்கர். அவருடைய பாணிக்கும், கார்த்தியின் எதிர்பார்ப்புக்கும் பொருத்தமாக இல்லை என்பது டோலிவுட் வட்டாரத் தகவல். அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.
கார்த்தி நடித்து கடைசியாக வந்த "வா வாத்தியார்" படம் படுதோல்வி அடைந்தது. அதனால், அவர் தனது படங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறாராம். அவர் நடித்து முடித்துள்ள "சர்தார் 2" விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து "மார்ஷல்" படத்தில் நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!