
மும்பை வாழ்க்கை, நாங்கள் எடுத்த சரியான முடிவு - சூர்யா
மும்பையில் செட்டிலானது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், ""27 ஆண்டுகள் எனக்காக என் குடும்பத்துடன் சென்னையில் இருந்தார் ஜோதிகா. ஒரு ஆணுக்குத் தேவையானது பெண்ணுக்கும் தேவை. அதை நான் தாமதமாகவே புரிந்து கொண்டேன். ஜோதிகாவும் அவருடைய குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என நினைத்தேன். நமக்காக அவருடைய ஆசையை ஏன் பறிக்க வேண்டும் என்றும் யோசித்தேன்,” என்று கூறியிருந்தார்.
இதனிடையே, நேற்று மும்பையில் "கங்குவா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், சூர்யாவின் மும்பை வாழ்க்கை எப்படி உள்ளது என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சூர்யா, “மும்பையில் இருப்பது சிறப்பாக உள்ளது. இந்த ஊர் என்னுடைய மாமியாரின் ஊர், இதைப் பற்றி நான் எப்படி தவறாக சொல்ல முடியும். இங்கு எனக்கு அதிகமான அன்பு கிடைக்கிறது. மும்பையில் எனது குழந்தைகள் நன்றாக செட்டில் ஆகி, பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.
வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது, இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு மகிழ்ச்சி. இங்கு நிறைய பேரை சந்திக்க முடிகிறது. சென்னையில் இருந்தால் எப்போதாவது ஒரு முறைதான் சந்திப்புகள் நடக்கும். இங்கு திரையுலகத்தைச் சேர்ந்த மற்ற துறைகளைச் சேர்ந்த பல அற்புதமான மனிதர்களைப் பார்க்க முடிகிறது,” என தனது மும்பை வாழ்க்கை பற்றி பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் பேசியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!