
விஜய் 69ல் நடிப்பாரா கன்னட நடிகர் சிவராஜ்குமார்?
“விஜய் 69ல் நடிப்பேனா என்பது தெரியாது. ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை எனக்காகச் சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய தேதிகளைப் பொறுத்தே அது அமையும். விஜய் மிகச் சிறந்த நடிகர், மனிதர். அரசியலில் அவருடைய லட்சியம் வியப்பாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் 69 படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், பிரியா மணி, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஒரு மருத்துவ சிகிச்சைக்காக சிவராஜ்குமார் அமெரிக்கா செல்லப் போவதாகவும் தகவல் உள்ளது. அதனால், அவர் விஜய் 69 படத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
ரஜினிகாந்த நடித்த "ஜெயிலர்" மற்றும் தனுஷ் நடித்த "கேப்டன் மில்லர்" ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார் சிவராஜ்குமார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!