
கங்குவா முன்பதிவு நேற்றிரவு முதல் ஆரம்பம்
இருந்தாலும், ரஜினி, விஜய், கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை அளவிற்கு "கங்குவா" படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வினியோகஸ்தர் தரப்பில் கறாராக நடந்து கொள்வதே அதற்குக் காரணம் என்கிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவு தளங்களில் பார்த்தால் "அமரன்" படம் எவ்வளவு தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறதோ அதே அளவிற்குத்தான் "கங்குவா" படத்திற்கான தியேட்டர்களும் இருக்கிறது. இரண்டு வாரத்தை முடிக்க உள்ள "அமரன்" படத்திற்கான தியேட்டர் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருக்கிறது.
கனமழைக்கான அறிவிப்பு, அமரன் படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பது உள்ளிட்ட விஷயங்கள் தியேட்டர்காரர்களை யோசிக்க வைக்கிறதாம். "வேட்டையன்" படத்துடன் மோத வேண்டாம் என பின் வாங்கியது பரவாயில்லை. அதே சமயம் தீபாவளிக்கு "கங்குவா" படத்தை வெளியிட்டிருக்கலாம். தனி வெளியீடாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது வெளியிடுவது ஒரு தவறான ரிலீஸ் என திரையுலகினரின் கருத்தாக உள்ளது. மழையின் தாக்கம் "கங்குவா" படத்தை பாதிக்குமா என்ற அச்சத்தில் படத்தைத் திரையிடும் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!