
அமெரிக்காவில் புஷ்பா 2 முன்பதிவு ஆரம்பம்
இப்படத்திற்கான அமெரிக்க முன்பதிவு விறுவிறுப்பாக ஆரம்பமாகியுள்ளது. தற்பேதைக்கு 554 காட்சிகளுக்கான முன்பதிவு நடந்து வருகிறது. தெலுங்கில் 300 காட்சிகளுக்கு அதிகமாகவும், ஹிந்தியில் 200 காட்சிகளுக்கு அதிகமாகும் தற்போது நடந்து வருகிறது. வரும் திங்கள் கிழமை முதல் ஐமேக்ஸ், பிஎல்எப் உள்ளிட்ட திரைகளுக்கும் சேர்த்து முழுமையான முன்பதிவு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
தெலுங்கில் வெளியான "கல்கி 2898 ஏடி, தேவரா" ஆகிய படங்கள் இந்த ஆண்டில் அமெரிக்காவில் அதிக வசூலைப் பெற்றன. அவற்றை விடவும் "புஷ்பா 2" புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!