
மீண்டும் ஸ்ரீ லீலாவை தேடி சென்ற புஷ்பா 2 படக்குழு!
புஷ்பா முதல் பாகத்தில் "ஊ சொல்றியா " என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் வைரலானது. இதேபோல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீ லீலாவை அணுகினர். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் பாலிவுட் நடிகைகளான த்ரிப்தி டிகிரி, ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது. ஆனால், இவர்கள் பெரும் தொகை சம்பளமாக கேட்பதால் தற்போது இந்த முயற்சியிலிருந்து வெளியேறினர் படக்குழு.
இப்போது மீண்டும் ஸ்ரீலீலாவை அணுகி இந்த பாடலுக்கு நடனம் ஆட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். இன்னும் இந்த ஒரு பாடல் காட்சி ஒன்றும் மட்டும் தான் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!