
பிளாஷ்பேக் : சீர்திருத்த திருமணத்தை பேசிய படம்
இந்த படத்தை தயாரிக்க அப்போதிருந்த பல ஸ்டூடியோக்கள் முன்வராதபோது இயக்குனர் கே.வி.ரெட்டி. ஜெயந்தி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தானே தயாரித்து, இயக்கினார். தமிழில் "வாழ்க்கை ஒப்பந்தம்" என்ற பெயரிலும், தெலுங்கில் "பெல்லினாட்டி பிரமனாலு" என்ற பெயரிலும் தயாரானது. தெலுங்கில் பெரிய வெற்றியும், தமிழில் சுமாரான வெற்றியும் பெற்றது.
நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்தார். ஜமுனா, நாயகி. கே.சாரங்கபாணி, ராஜசுலோச்சனா, எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி உட்பட பலர் நடித்தனர். பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ், கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். கண்டசாலா இசையமைத்த இந்த படத்துக்குப் பாடல்களை, தஞ்சை ராமையா தாஸ் எழுதியிருந்தார். சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இந்த படம் பேசியது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!