
தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனர்
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் "நீல நிறச் சூரியன்". இப்படத்தில் கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்டீவ் பெஞ்சமின் இசை அமைத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, விருதுகளை பெற்ற இந்த படத்தை பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் சார்பில் மாலா மணியன் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் வெளியாகிறது.
படம் பற்றி சம்யுக்தா விஜயன் கூறும்போது “ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது? எப்படி அதை கடந்து இவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்த விதமான நாடகத்தன்மையும் இல்லாமல் சொல்லும் படம் இது” என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!