
கல்லுரிகளில் சினிமா விழாக்களுக்குத் தடை வருமா?
இளைஞர்கள்தான் இப்போது திரைப்படங்களைப் பார்க்க அதிகம் வருகின்றனர் என்பதால் இப்படியான நிகழ்வுகள் கடந்த சில வருடங்களில் அதிகம் நடக்கிறது. அதற்கு கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் ஏற்கெனவே எழுந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களோ, பல்கலைக்கழக நிர்வாகங்களோ, உயர்கல்வித் துறையோ அப்படியான விழாக்கள் நடத்தப்படுவதை இதுவரையிலும் தடுக்காமல் உள்ளார்கள்.
சமீபத்தில் கூட விக்ரம் நடித்து வெளிவந்த "தங்கலான்" படத்தின் புரமோஷனுக்காக சில ஊர்களில் உள்ள கல்லூரிகளுக்கு விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் சென்று வந்தனர்.
தற்போது மதுரையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் டிவி நகைச்சுவை நடிகர் ராமர் கலந்து கொள்ள இருப்பது குறித்து புத்தக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. புத்தக விழாவிற்கு எதற்கு நடிகரை அழைக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. உடனடியாக அவருக்குப் பதிலாக வேறொரு பேச்சாளரை மாற்றிவிட்டனர்.
கல்லூரிகள், கல்வி நிலையங்களில் சினிமா விழாக்களை நடத்துவதற்கு திரையுலகத்தில் இருந்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!